உள்ளூர் செய்திகள்
அதிராம்பட்டினத்தில் விநாயகர் ஊர்வலம் நடந்தது.
அதிராம்பட்டினத்தில் விநாயகர் ஊர்வலம்
- அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் வழியாக ஏரிப்புறக்கரை கடலுக்கு எடுத்து செல்லப்பட்டது.
- 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.
அதிராம்பட்டினம்:
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று மாலை அதிராம்பட்டினம் வண்டிப் பேட்டையில் இருந்து பட்டுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விநாயகர் சிலைகள் அனைத்தையும் ஒன்றிணைத்து விநாயகர் ஊர்வலம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் வழியாக ஏரிப்புறக்கரை கடலுக்கு எடுத்து செல்லப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் இளைஞர்கள் கலந்துக்கொண்டனர்.
ஏரிப்புறக்கரையில் சிலைகளை கரைக்க கடற்கரையில் படகு தயார் நிலையில் நிறுத்தி வைக்கபட்டது.
500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.