உள்ளூர் செய்திகள்

வடலூரில் விநாயகர் சதுர்த்திவிழா பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்

Published On 2023-09-15 09:37 GMT   |   Update On 2023-09-15 09:37 GMT
  • ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
  • தீப்பற்றக்கூடிய பொருட்களை கட்டுமானத்தில் பயன்படுத்துவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

கடலூர்:

வடலூரில் நெய்வேலி உட்கோட்ட காவல்துறை சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா குறித்து ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நெய்வேலி டி.எஸ்.பி. ராஜ்குமார் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் நெய்வேலி டவுன்ஷிப் சாகுல்ஹமீத், தெர்மல் லதா, மந்தாரக்குப்பம் மலர்விழி, ஊமங்கலம் பிருந்தா, குறிஞ்சிப்பாடி வீரசேகரன், வடலூர் ராஜா, குள்ளஞ்சாவடி பாண்டிசெல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விநாயகர் சிலை வைக்கும் இடத்தில் உரிமையாளரின் அனுமதி பெற வேண்டும். அரசுக்கு சொந்தமான இடமாக இருந்தால் சம்பந்தப்பட்ட துறையில் அனுமதி பெற வேண்டும்.ஒலி பெருக்கி பயன்படுத்தினால் காவல்துறையிடம் அனுமதி வாங்க வேண்டும். ஒலிபெருக்கி டெசிபல் அளவினை குறைத்து பயன்படுத்த வேண்டும். எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கட்டுமானத்தில் பயன்படுத்துவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். விழாவின் போது பொது அமைதி, பொது பாதுகாப்பு, போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல் ஆகியவற்றை முறையாக கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. கூட்டத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபடுவோர் மற்றும் இந்து முன்னணியினர் உட்பட பலரும் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News