உள்ளூர் செய்திகள்

‘அரோகரா’ கோஷம் முழங்க பக்தர்கள் தேரை வடம் பிடித்தனர்.

கந்தசஷ்டி விழா; சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் தேரோட்டம்

Published On 2022-10-29 15:25 IST   |   Update On 2022-10-29 15:25:00 IST
  • தேரில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் எமுந்தருளினார்.
  • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்தனர்.

நாகப்பட்டினம்:

நாகை அருகே சிக்க லில் அமைந்துள்ள சிங்காரவேலர் கோவில் புகழ்பெற்ற முருகன் கோவிலாகும்.

சிக்கலில் வேல்வாங்கி செந்தூரில் சம்ஹாரம் செய்தான் முருகன் என்று கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ள வரலாறாகும்.

அதற்கேற்ப சிக்கல் கோலிலின் சூரசம்ஹார விழா கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது.

தேரில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் எமுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து காட்சியளித்தார் அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

இன்று மாலை சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Tags:    

Similar News