உள்ளூர் செய்திகள்

அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.750 உதவித்தொகையுடன் பெண்களுக்கு இலவச பயிற்சி

Published On 2022-07-01 09:01 GMT   |   Update On 2022-07-01 09:01 GMT
  • சேலம் அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.750 உதவித்தொகையுடன் பெண்களுக்கு இலவச பயிற்சி நடைபெற்றது.
  • மேலும் அனைத்து பயிற்சியாளர்களுக்கும் இன்டர்நெட் வசதியுடன் கணினி பயிற்சி அளிக்கப்படுகிறது.

சேலம்:

சேலம் அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் செல்வராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சேலம் கலெக்டர் பங்களா அருகே அய்யந்திருமாளிகை ரோட்டில் இயங்கி வரும் அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவிகள் சேர்க்கை நடைபெற உள்ளது. இங்கு சேருவதற்கு 10-ம் வகுப்பு தேறிய, தவறிய மற்றும் பட்டம் பெற்ற பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஓராண்டு தொழிற்பிரிவுகளான கணினி இயக்குபவர், திட்டமிடுதல் உதவியாளர், சுருக்கெழுத்து மற்றும் செயலக உதவியாளர், வரவேற்பு கூட அலுவலக உதவியாளர், 2 ஆண்டுகள் தொழிற்பிரிவுகளான கட்டிடப்பட வரைவாளர், மின்சார பணியாள், கம்பியர் மின்னணுவியல், தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் சாதனங்கள் பராமரிப்பு, கம்பியர் கருவிகள், ஏ.சி., பிரிட்ஜ் டெக்னீசியன் ஆகிய பயிற்சிகள் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்களுக்கு அளிக்கப்படுகிறது.

மேலும் அனைத்து பயிற்சியாளர்களுக்கும் இன்டர்நெட் வசதியுடன் கணினி பயிற்சி அளிக்கப்படுகிறது. பட்டப்படிப்பு முடித்துள்ள நிலையில் கணினி மற்றும் தொழிற்கல்வி பெற விரும்பும் பெண்கள், இல்லத்தரசிகள் பயிற்சியில் சேரலாம். வயது வரம்பு கிடையாது. பயிற்சி கட்டணம் கிடையாது.

இலவச பஸ் பாஸ் மற்றும் மாதாந்திர உதவித்தொகையாக ரூ.750 வழங்கப்படும். பாடப்புத்தகம், வரைபட கருவிகள், 2 செட் சீருடை மற்றும் அதற்கான தையல் கூலி ஆகியவை தமிழக அரசால் இலவசமாக வழங்கப்படும். வருகிற 20-ந் தேதி வரை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் விவரங்களை பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு பயிற்சி நிலைய முதல்வரை நேரில் அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News