உள்ளூர் செய்திகள்

தையல் பயிற்சி முகாம் நடந்தது.

இலவச தையல் பயிற்சி முகாம்

Published On 2022-09-24 08:43 GMT   |   Update On 2022-09-24 08:43 GMT
  • ஏழை எளிய, நடுத்தர பெண்கள் பயன்பெறும் வகையில் இலவச தையல் பயிற்சி வகுப்புகள் தொடங்கி வைக்கப்பட்டன.
  • அழகுக்கலை, வெள்ளாடு வளர்ப்பு உள்ளிட்ட பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்படுகிறது.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரம் ஊராட்சியில் 50 மகளிருக்கு இலவச தையல் பயிற்சி வகுப்புகள் தொடங்கி வைக்கப்பட்டன.

ஊராட்சியில் உள்ள திருக்கண்ணபுரம், ராமநந்தீஸ்வரம், காக்கமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஏழை எளிய நடுத்தர பெண்கள் பயன்பெறும் வகையில் இலவச தையல் பயிற்சி வகுப்புகள் தொடங்கி வைக்கப்பட்டன.

இந்த தையல் பயிற்சி வகுப்பு ஒரு மணி நேரத்துக்கு 5 - பேர் வீதம் தினமும் 50- பேருக்கு தையல் பயிற்சி கற்றுக் கொடுக்கப்படுகிறது.

இதில் சாம்பிராணி தயாரித்தல், அழகுக்கலை, வெள்ளாடு வளர்ப்பு உள்ளிட்ட பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்படுகிறது.

ஊராட்சி மன்றத் தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

இதில் பயிற்சியாளர் ஜெயந்தி, வார்டு உறுப்பினர் ஆல்பர்ட் மற்றும் உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News