உள்ளூர் செய்திகள்

கயத்தாறு வட்டார வளமையத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாமை பேரூராட்சி மன்ற தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

கயத்தாறில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம்

Published On 2023-10-19 08:35 GMT   |   Update On 2023-10-19 08:35 GMT
  • கயத்தாறு பேரூராட்சி மன்ற தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரைதொடங்கி வைத்து கண் கண்ணாடிகளை வழங்கினார்.
  • மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் இலவச சிகிச்சை, பார்வை குறைந்த மாணவ-மாணவிகளுக்கு இலவச கண்ணாடி 86 மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.

கயத்தாறு:

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வட்டார ஒருங்கி ணைந்த பள்ளிக்கல்வித் துறை சார்பில் கயத்தாறு வட்டார வள மையத்தில் வைத்து 18 வயதுடைய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடை பெற்றது.

முகாமில் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் மாணவ-மாணவிகளுக்கு பரிசோதனை மருத்துவ மனைகள் சென்று இலவச சிகிச்சை, பார்வை குறைந்த மாணவ-மாணவிகளுக்கு இலவச கண்ணாடி 86 மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.

மேவலும் மருத்தவர்கள் கமலா மாணவ-மாணவிக ளுக்கு கண்கள் பாதுகாக்கப் படும் வழிமுறைகளை பற்றி விளக்கி கூறினார். இந்த முகாமை கயத்தாறு பேரூ ராட்சி மன்றத் தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை தொடங்கி வைத்து கண் கண்ணாடிகளை வழங்கியும், அங்கு பரிசோதனைக்கு வந்தவர்களுக்கு அன்ன தானமும் வழங்கினார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி யின் மாவட்ட துணை அமைப்பாளர் ராஜதுரை, வட்டார வளமைய மேற்பார்வையாளர் சிதம்பரம், வட்டார கல்வி அலுவலர் கனேசன், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுதா, உடற்கல்விஆசிரியர் சுரேஷ், பயிற்றுனர்கள் செந்தாமரை கண்ணன், மோகன் முருகன், நாயகம், ராதா டெல்லா, ஜான்சி, ராணி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற் கான ஏற்பாடு களை வட் டார வளமைய அலுவலர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News