உள்ளூர் செய்திகள்
மருத்துவ முகாம் நடந்தபோது எடுத்த படம்.
புளியங்குடியில் இலவச பொது மருத்துவ ஆலோசனை முகாம்
- புளியங்குடியில் சிந்தாமணி ராஜகோபால் யாதவ் அறக்கட்டளை மற்றும் தெலுங்கு யாதவ சமுதாயம் இணைந்து நடத்திய இலவச பொது மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது
- முகாமில் ஓய்வு பெற்ற மருத்துவ பேராசிரியர் மதுரை சோமசுந்தரம் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார்.
புளியங்குடி:
புளியங்குடியில் சிந்தாமணி ராஜகோபால் யாதவ் அறக்கட்டளை மற்றும் தெலுங்கு யாதவ சமுதாயம் இணைந்து நடத்திய இலவச பொது மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் ஓய்வு பெற்ற மருத்துவ பேராசிரியர் மதுரை சோமசுந்தரம் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார்.
முகாமில் அறக்கட்டளை செயலாளர் துரைராஜ், சுப்பையா, சித்துராஜ், தலைமையாசிரியர் சேதுராமலிங்கம், ஓய்வு பெற்ற கூட்டுறவு தணிக்கை துறை உதவி இயக்குனர் மனோகரன், தெலுங்கு யாதவ சமுதாய தலைவர் கிருஷ்ணமூர்த்தி, கங்காதரன், கோபாலகிருஷ்ணன், ராஜா மற்றும் நர்ஸ் பிரான்ஸி சாமிராஜ், பரிசோதகர் சுந்தர்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.