உள்ளூர் செய்திகள்

கரியசோலை அரசுபள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம்

Published On 2023-11-21 09:13 GMT   |   Update On 2023-11-21 09:13 GMT
  • ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்
  • 10 பேருக்கு கண்புரை அறுவை சிகிச்சை

ஊட்டி,

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கே.பி.டி.எல் பவுண்டேஷன், ஆல் த சில்ரன் ஒயிட் அரோ டிரஸ்ட், நீலகிரி உதவும் கரங்கள் ஆகியவை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம், கரியசோலை அரசு உயர்நிலை பள்ளியில் நடைபெற்றது. ஆல் த சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் தலைமை தாங்கினார். நீலகிரி உதவும் கரங்கள் அமைப்பு நிர்வாகி சாரதா முன்னிலை வகித்தனர்.

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் முகாமினை துவக்கி வைத்தார்.

ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ குழுவினர் அந்தோனியமமாள், ராகுல் உள்ளிட்டோர் கண் பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை அளித்தனர். முகாமில் 50க்கு மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்களில் 10 பேருக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

Tags:    

Similar News