உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

தேனியில் செயல் அலுவலர் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

Published On 2022-07-08 11:09 IST   |   Update On 2022-07-08 11:09:00 IST
  • இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் 42 காலிப்பணியிடங்களுக்கு செப்டம்பர் 10-ந் தேதி தேர்வு நடைபெற உள்ளது.
  • 4 தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் தேனி மற்றும் உத்தமபாளையத்தில் நடைபெற்று வருகின்றது.

தேனி:

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் 42 காலிப்பணியிடங்களுக்கு செப்டம்பர் 10-ந் தேதி தேர்வு நடைபெற உள்ளது. மேலும் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் நிலை 8ல் உள்ள 36 காலிப்பணியிடங்களுக்காக செப்டம்பர் 11-ந் தேதி தேர்வு நடைபெற உள்ளது.

மொத்தம் 78 காலிப்பணியிடங்கள் அடங்கிய இத்தேர்வுகளுக்கான இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் சிறந்த வல்லுனர்களைக் கொண்டு தொடங்கப்பட உள்ளது.

இப்பயிற்சியின் போது இலவசப் பாடக்குறிப்புகள், ஒவ்வொரு பாடத்திற்கும் மாதிரி தேர்வுகள், வினாடி வினா மற்றும் குழு விவாதங்களும் நடத்தப்படும். தற்போது தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட தொகுதி-4 தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் தேனி மற்றும் உத்தமபாளையத்தில் நடைபெற்று வருகின்றது.

எனவே தொகுதி 4 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மனுதாரர்களும் நேரடி பயிற்சி வகுப்பில் இணைந்து பயிலலாம். மேலும் இவ்வலுவலகத்தில் அனைத்து போட்டித்தேர்வுகளுக்கான புத்தகங்கள் நூலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நூலகத்தை போட்டித் தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Tags:    

Similar News