உள்ளூர் செய்திகள்

ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம் ரூ.5 லட்சம் மோசடி

Published On 2022-11-25 09:50 GMT   |   Update On 2022-11-25 09:50 GMT
  • வங்கி கணக்கில் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் செலுத்தினார்.
  • பல நாட்களாக மேற்கூறிய நிறுவனத்தில் இருந்து எந்த ஒரு கடன் தொகையும் வழங்கப்படவில்லை.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஒருவர் தனிநபர் கடன் வாங்க முடிவு செய்தார். அந்த நேரத்தில் அவரது செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் வந்தது.

அதில் வெளியூரில் உள்ள எங்களது நிறுவனம் மூலம் குறைந்த வட்டிக்கு தனிநபர் கடன் தருகிறோம்.

அதற்காக வங்கி கணக்கில் பணம் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை உண்மை என்று நம்பிய அந்த அரசு ஊழியர் குறுந்தகவலில் உள்ள லிங்கை திறந்து அதில் குறிப்பிட்டு இருந்த வங்கி கணக்கில் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் செலுத்தினார். ஆனால் தனி நபர் கடன் கிடைக்கவில்லை.

மீண்டும் செல்போன் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது.

அதிலும் தனிநபர் கடன் தருவதாக கூறப்ப ட்டிருந்தது. அதன் அடிப்படையில் குறிப்பிட்ட வங்கி கணக்கில் மீண்டும் சில தவணைகளாக ரூ.3 லட்சத்து 39 ஆயிரம் செலுத்தினார்.

ஆனால் பல நாட்களாக மேற்கூறிய நிறுவனத்தில் இருந்து எந்த ஒரு கடன் தொகையும் வழங்க ப்படவில்லை.

அப்போது தான் ஏமாற்ற ப்பட்டோம் என்பதை அவர் உணர்ந்தார். மொத்தம் ரூ‌.5 லட்சத்தை மர்ம நபர்கள் மோசடி செய்துள்ளனர்.இது குறித்து தஞ்சை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்‌‌.

அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News