உள்ளூர் செய்திகள்

ஏரியில் சட்டவிரோதமாக அமைத்த ராட்சத குழாயை ஜே.சி.பி. எந்திரம் மூலம் அதிகாரிகள் அகற்றிய போது எடுத்தபடம்.

ஏரியில் வழிபாதைக்காகஅமைத்த ராட்சத குழாயை அகற்றிய அதிகாரிகள்

Published On 2023-05-12 14:39 IST   |   Update On 2023-05-12 14:39:00 IST
  • சில மாதத்திற்கு முன்பு நள்ளிரவு ராட்சத குழாய் அமைத்து வழி பாதை அமைத்துள்ளார்.
  • ஏரியை ஆக்கிரமித்து வழி பாதையில் புதைத்து இருந்த ராட்சத குழாயை ஜே.சி.பி., கிரைன் மூலம் அகற்றினர்.

சூளகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா ஒசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை ஒரமாக மேலுமலை ஊராட்சியை சார்ந்த பெரிய ஏரி 20 ஏக்கர் அரசு நிலத்தில் அமைந்துள்ளது.

இந்த ஏரியில் ஒருவர் சில மாதத்திற்கு முன்பு நள்ளிரவு ராட்சத குழாய் அமைத்து வழி பாதை அமைத்துள்ளார். இதற்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதன் பேரில் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் உத்தரவின் பேரில் நேற்று சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோபால கிருஷ்ணன், விமல்ரவிக்குமார், சூளகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மதன்மோகன், சிவக்குமார், வருவாய் அலுவலர் ரமேஷ், கிராம அலுவலர் ராமர், ஒன்றிய பொறியாளர் சுமதி, துணை பி.டி.ஒ.க்கள் முருகன், உமாசங்கர், விவேகானந்தன், வெங்கடேசன், ஊராட்சி செயலர் வெங்கடேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

ஏரியை ஆக்கிரமித்து வழி பாதையில் புதைத்து இருந்த ராட்சத குழாயை ஜே.சி.பி., கிரைன் மூலம் அகற்றினர். அரசு நிலத்தை மீட்ட மாவட்ட கலெக்டர், அதிகாரிகளை பொதுமக்கள் பாராட்டினர்.

Similar News