உள்ளூர் செய்திகள்

மாற்று கிட்னி அமைக்க உதவி கேட்டு கிட்னி பாதிக்கப்பட்ட கணவருடன் மனைவி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தபோது எடுத்தபடம்.

கிட்னி பாதித்த கணவருக்கு மாற்று கிட்னி கேட்டு மனைவி மனு

Published On 2023-05-15 15:18 IST   |   Update On 2023-05-15 15:18:00 IST
  • தாமோதரன், அவரது மனைவி மாலதி மற்றும் 2 வயது குழந்தையுடன் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.
  • எனது கணவருக்கு கடந்த 7 மாதத்திற்கு முன்பு 2 கிட்னியும் செயல் இழந்து விட்டது. இதனால் எனது கணவர் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே உள்ளார்.

சேலம்:

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்த தாமோதரன், அவரது மனைவி மாலதி மற்றும் 2 வயது குழந்தையுடன் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துவிட்டு செய்தியாளரிடம் தாமோதரன் மனைவி கூறும்தாவது:-

எங்களுக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆன நிலையில் 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் எனது கணவருக்கு கடந்த 7 மாதத்திற்கு முன்பு 2 கிட்னியும் செயல் இழந்து விட்டது. இதனால் எனது கணவர் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே உள்ளார். கனவருக்கு மாற்று கிட்னி அமைக்க எனது கிட்னி பொருந்தாது என மருத்துவர் தெரிவித்து விட்டார். இதனால் எனது கணவருக்கு கிட்னி கிடைக்காமல் அவதிபட்டு வருவதாகவும் வேலைக்கு செல்லாமல் இருப்பதால் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது சாப்பிடுவதற்கு கூட வழியில்லாமல் தவித்து வருவதாகவும் தெரிவித்தார். மாவட்ட நிர்வாகம் தயவு கூர்ந்து, எனது கணவருக்கு கிட்னி சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் பொருளா தாரத்திற்கு உதவி புரிய வேண்டுமென கண்ணீர் மல்க தெரிவித்தார்.

Tags:    

Similar News