உள்ளூர் செய்திகள்

உணவு பாதுகாப்பு பயிற்சி முகாம் நடந்தது.

உணவு பாதுகாப்பு பயிற்சி முகாம்

Published On 2023-11-05 09:31 GMT   |   Update On 2023-11-05 09:31 GMT
  • போதை பொருட்கள் விற்பதை நிறுத்திவிட்டு உணவு பொருட்கள் விற்பனை செய்ய வேண்டும்.
  • முடிவில் துணை தலைவர் காசி அறிவழகன் நன்றி கூறினார்.

நாகப்பட்டினம்:

திருமருகல் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை மற்றும் திருமருகல் வர்த்தக சங்கம் இணைந்து நடத்திய உணவு பாதுகாப்பு பயிற்சி மற்றும் உணவு பாதுகாப்பு பதிவு,உரிமம் பெறும் முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு திருமருகல் வர்த்தக சங்க தலைவர் ஜெயபால்சங்கர் தலைமை வகித்தார்.

முன்னாள் வர்த்தக சங்க தலைவர் தியாக சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார்.முன்னதாக வர்த்தக சங்க செயலாளர் காமராஜ் வரவேற்றார். இதில் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் புஷ்பராஜ், திருமருகல் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் அந்தோணி பிரபு ஆகியோர் கலந்துக் கொண்டு உணவு பாதுகாப்பு பயிற்சி முகாமை தொடங்கி வைத்து தடை செய்யப்பட்ட போதை பொருட்கள், குட்கா,பான் மசாலா போன்றவற்றை விற்பனை செய்வதை நிறுத்திவிட்டு,அரசின் விதிப்படி உணவு பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என பேசினார்.

இதில் வர்த்தக சங்க பொருளாளர் அ.ஹரிஹரன்,வர்த்தக சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணை தலைவர் காசி அறிவழகன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News