உள்ளூர் செய்திகள்
சிதம்பரம் மீன் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு அலுவலர் திடீர் ஆய்வு மேற்கொண்ட போது எடுத்தபடம்.
சிதம்பரம் மீன் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு அதிகாரி திடீர் ஆய்வு
- நகராட்சி மீன் மார்க்கெட்டில் ரசாயணம் தடவிய பழைய மீன்கள் மற்றும் நண்டுகள் விற்பனை செய்யப்ப டுவதாக தகவல் வந்தது
- உணவு பாதுகாப்பு அலுவலர் அருண்மொழி ஆய்வு மேற்கொண்டனர்
கடலூர்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் வடக்குமெயின் ரோட்டில் உள்ள நகராட்சி மீன் மார்க்கெட்டில் ரசாயணம் தடவிய பழைய மீன்கள் மற்றும் நண்டுகள் விற்பனை செய்யப்ப டுவதாக தகவல் வந்தது. இதையடுத்து சிதம்பரம் உணவு பாதுகாப்பு அலுவலர் அருண்மொழி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மீன் மார்க்கெட்டில் விற்பனை க்காக வைக்கப்பட்டிருந்த 2 நாட்களுக்கு முன் பிடிக்கப்பட்ட மீன்க ளை அப்புறப்படுத்தினர். மேலும் தொடர்ந்து புகார் வந்தால், மீன்களை கைப்பற்றி சோதனைக்கு அனுப்பப்படும் என உணவு பாதுகாப்பு அலுவலர், மீன் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.