உள்ளூர் செய்திகள்

நவராத்திரி விழா காரணமாக கோவை மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு

Published On 2023-10-20 08:50 GMT   |   Update On 2023-10-20 08:50 GMT
  • மல்லி ஒரு கிலோ ரூ.1200-க்கு விற்பனை
  • பூக்கள் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

கோவை,

நவராத்திரி விழா தொடங்கி நடந்து வருகிறது. வீடுகளிலும், தொழில் நிறுவ னங்களிலும் கொலு பொம்மைகள் வைத்து பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள்.

மேலும் கோவில்களில் தினந்தோறும் அம்மனுக்கு வெவ்வேறு விதமான அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடக்கின்றன. இதற்காக பூக்கள் அதிக ளவில் பயன்படுத்தப்படு கிறது. பூக்களின் தேவை அதிகமாக இருப்பதால் அதன் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. கோவை பூ மார்க்கெட்டுகளில் கடந்த சில நாட்களாக பூக்கள் வாங்குவதற்காக பொது மக்கள் கூட்டம் அலைமோது கிறது. பூக்கள் விலை உயர்ந்திருந்தாலும் பூஜை க்காக பொதுமக்கள் பூக்களை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கிறார்கள்.

மல்லிகை பூ ஒரு கிலோ ரூ.1200-க்கும், மற்றொரு ரகம் ரூ.800-க்கும் விற்பனையானது. முதல் ரக மல்லிகைப்பூ மார்க்கெட்டுக்கு வந்த சிறிது நேரத்தில் விற்று தீர்ந்தது.முல்லைப்பூ ஒரு கிலோ ரூ.600-க்கும், செவ்வந்தி பூ ஒரு கிலோ ரூ.320-க்கும் விற்கப்பட்டது. மற்ற பூக்கள் விற்பனையான விலை விவரம் (ஒரு கிலோ) வருமாறு:-

சம்பங்கி - ரூ.240, அரளி - ரூ.400, ஜாதி பூ- ரூ.800, ரோஜா - ரூ.300, கலர் செ வ்வந்தி - ரூ.240, தாமரை 1 - ரூ.40, செண்டுமல்லி - ரூ.80, கோழிக்கொண்டை பூ - ரூ.120, மஞ்சள் அரளி - ரூ.400, துளசி - ரூ.50, மருகு ஒரு கட்டு -ரூ.20, மரிக்கொழுந்து 1 கட்டு - ரூ.30, வாடாமல்லி -ரூ.120

வருகிற 23-ந் தேதி ஆயுத பூஜை மற்றும் 24-ந் தேதி விஜயதசமி விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாக்களுக்கு பூக்கள் அதிகம் பயன்படுத்தப்படும் என்பதால் பூக்கள் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News