உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கார்த்திகேயன் வழங்கிய காட்சி. 

ராதாபுரத்தில் மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - கலெக்டர் கார்த்திகேயன் பங்கேற்பு

Published On 2023-05-11 09:30 GMT   |   Update On 2023-05-11 09:30 GMT
  • ராதாபுரத்தில் மீன்வளத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் மீனவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது.
  • கூட்டத்தில் 10 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவ தற்கான ஆணைகளை, மாவட்ட கலெக்டர் கார்த்தி கேயன் வழங்கினார்.

நெல்லை:

நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் மீன்வளத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் மீனவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் 10 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவ தற்கான ஆணைகளை, மாவட்ட கலெக்டர் கார்த்தி கேயன் வழங்கினார். தொடர்ந்து அவர் கூட்டத்தில் பேசியதாவது:-

நெல்லை மாவட்டத்தில் கூடுதாழை, கூட்டப்பனை, உவரி, கூத்தன்குழி, இடிந்தகரை, பெருமணல், கூட்டப்புளி ஆகிய 7 மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 32,970 பேர் வசித்து வருகின்றனர்.

இங்கு மீன்பிடி தடைகாலம் மே மாதம் 15-ந்தேதி முதல் ஜீன் 14-ந்தேதி வரை கிழக்கு பகுதியில் மீன் பிடிக்க தடைக்காலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மீன்பிடி தடை காலங்களில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட ஒவ்வொரு மீனவ குடும்பத்திற்கும் தலா ரூ.5000 வீதம் வழங்கப்பட்டு வருகிறது.ஒவ்வொரு மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திலும் அவர்களது கோரி க்கைகளை உடனடி யாக நிறைவேற்று வதற்கு நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News