உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டதை படத்தில் காணலாம்.

கல்லிடைக்குறிச்சியில் நீச்சல் அவசியம் பற்றி தீயணைப்பு வீரர்கள் செயல் விளக்கம்

Published On 2022-08-03 09:03 GMT   |   Update On 2022-08-03 09:03 GMT
  • பள்ளி மாணவ- மாணவிகளுக்கு நீரில் மூழ்கி தவிப்பவர்களை எப்படி காப்பாற்ற வேண்டும் என தீயணைப்பு துறையினர் செயல்முறை விளக்கம் அளித்தனர்.
  • அப்போது தாசில்தார் மாணவ -மாணவிகள் அனைவரும் தங்களை பாதுகாத்து கொள்ள காட்டாயம் நீச்சல் பழகிக்கொள்ள வேண்டும் என்றார்.

கல்லிடைக்குறிச்சி:

அம்பாசமுத்திரம் தீயணைப்பு துறை சார்பில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு நீரில் மூழ்கி தவிப்பவர்களை எப்படி மீட்டு உதவி செய்து காப்பாற்ற வேண்டும் என செயல்முறை விளக்கம் அளித்தனர்.

கல்லிடைக்குறிச்சி வாய்க்கால் பாலம் அருகே கன்னடியன் கால்வாயில் அம்பை தாசில்தார் ஆனந்த் பிரகாஷ் முன்னிலையில் மாணவர்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. அம்பை தீயணைப்பு நிலைய அலுவலர் பலவேசம், நிலை அலுவலர் போக்குவரத்து நாகநாதன், சிறப்பு நிலைய அலுவலர் அருணாச்சலம், கமலகுமார், தீயணைப்பாளர் பசுங்கிளி, இசக்கி பாண்டியன், முருக மணி, ஜாபர் அலி ஆகியோர் கலந்து கொண்டு செயல்முறை விளக்கத்தை மாணவ- மாணவிகளுக்கு செய்து காட்டினார். அப்போது தாசில்தார் மாணவ -மாணவிகள் அனைவரும் தங்களை பாதுகாத்து கொள்ள காட்டாயம் நீச்சல் பழகிக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர்.

Tags:    

Similar News