உள்ளூர் செய்திகள்

பலியான மாணவரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய மதியழகன் எம்.எல்.ஏ. தனது சொந்த நிதியில் இருந்து ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

பலியான மாணவன் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதி உதவி -மதியழகன் எம்.எல்.ஏ. வழங்கினார்

Published On 2022-11-21 15:06 IST   |   Update On 2022-11-21 15:06:00 IST
  • பர்கூர் எம்.எல்.ஏ.வுமான மதியழகன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
  • தனது சொந்த நிதியில் இருந்து ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே சக்கில்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபிநாத் (வயது 17). இவர் கப்பல்வாடி அரசு மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

நேற்று முன்தினம், பள்ளியில் சக மாணவர் தாக்கியதில், வலிப்பு ஏற்பட்டு கோபிநாத் உயிரிழந்தார். அவரது உடல் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, நேற்று பெற்றோரி டம் ஒப்படைக்கப்பட்டது.

மாணவரின் உடலுக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், பர்கூர் எம்.எல்.ஏ.வுமான மதியழகன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் மாணவரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய அவர், தனது சொந்த நிதியில் இருந்து ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கினார். அப்போது மாவட்ட அவை தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், துணை செயலாளர் கோவிந்தசாமி, ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், அறிஞர், பொதுக்குழு உறுப்பினர் அஸ்லம் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News