புயலால் வீட்டை இழந்த வயதான தம்பதியினருக்கு நிதி உதவி
- இந்த தம்பதியினர் தங்கியிருந்த வீடு கடந்த மாண்டஸ் புயலால் முற்றிலுமாக இடிந்து விழுந்தது.
- தங்குவதற்கு வீடு இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர்.
மொரப்பூர்,
மாரண்டஅள்ளி அருகே சி.எம் புதூரைச் சேர்ந்தவர் முத்தன்- திராவிட தாய் தம்பதியினர். சுமார் 50 ஆண்டுகளாக தி.மு.க. வின் கிளைச் செயலாளராக இருந்து வரும் இந்த தம்பதியினர் தங்கியிருந்த வீடு கடந்த மாண்டஸ் புயலால் முற்றிலுமாக இடிந்து விழுந்தது.
இந்த நிலையில் தங்குவதற்கு வீடு இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர்.
இந்த செய்தியை அறிந்த தருமபுரி மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் பாதிக்கப்பட்ட முதியவரின் வீட்டிற்கு சென்று அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து தற்காலிகமாக வீட்டை சரி செய்து கொள்வதற்காக ரூபாய் 25 ஆயிரம் நிதி உதவி அளித்து ஆறுதல் கூறினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் மனோகரன், துணைச் செயலாளர்கள் வழக்கறிஞர் ஆமணி, ராஜகுமாரி, பொருளாளர் முருகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், ஒன்றிய செயலாளர்கள் வழக்கறிஞர் கோபால், முனியப்பன்,கிருஷ்ணன், பேரூர் கழகச் செயலாளரும் பேரூராட்சி தலைவருமான முரளி, வெங்கடேசன்,மூத்த வழக்கறிஞர் சந்திரசேகர், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ராஜா, கலை இலக்கிய அணி ராஜபார்ட் ரங்கதுரை, ஒன்றிய அவைத்தலைவர் ராஜாமணி விவசாய அணி குமார்,கவுன்சிலர்கள் ராஜா, கார்த்திகேயன், புதூர் பழனி, ஜோதிவேல், விஜய், சக்தி ஊராட்சி மன்றத் தலைவர்கள் சென்னகேசவன், குமார், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.