உள்ளூர் செய்திகள்

காேப்புபடம்

நிதி நிறுவன அதிபர் வீட்டில் கொள்ளையடித்து ரெயிலில் மும்பைக்கு தப்பிச்சென்ற கொள்ளையர்கள் - தனிப்படையினர் முகாமிட்டு தேடுதல் வேட்டை

Published On 2022-06-17 11:34 GMT   |   Update On 2022-06-17 11:34 GMT
  • 4 வாலிபர்கள் முககவசம் அணிந்தபடி சங்கமேஸ்வரன் வீட்டுக்கு வந்தனர்.
  • திருப்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயிலில் மும்பைக்கு தப்பி சென்றுள்ளனர்.

திருப்பூர் :

திருப்பூர் அவினாசி ரோடு ராயபண்டார வீதியை சேர்ந்தவர் சங்கமேஸ்வரன் (வயது 63). நிதி நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ராஜேஸ்வரி (57). இவர்களுக்கு 2 மகள்கள். மூத்த மகளுக்கு திருமணமாகி கணவருடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். இளைய மகள் ஷிவானி (27), பெங்களூருவில் உள்ள கணினி நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார். தற்போது பெற்றோருடன் திருப்பூரில் உள்ளார்.

கடந்த 25 வயது மதிக்கத்தக்க 4 வாலிபர்கள் முககவசம் அணிந்தபடி சங்கமேஸ்வரன் வீட்டுக்கு வந்தனர். பின்னர் சங்கமேஸ்வரன், ராஜேஸ்வரி, ஷிவானி ஆகியோரின் கை, கால்களை கட்டிப்போட்டு வீட்டில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்து தப்பினர். இதில் 40 பவுன் நகை, ரூ.30 லட்சம் கொள்ளைபோனதாக கூறப்படுகிறது.

கைரேகை பதிவு செய்ததில் பழைய குற்றவாளியின் கைரேகையுடன் ஒத்து போனது. பிரபல கொள்ளையன் தனது கூட்டாளிகள் 3 பேருடன் இந்த கொள்ளை சம்பவததில் ஈடுபட்டுள்ளது கண்டறியப்பட்டது. திருப்பூரில் தங்கி இருந்து பிரிண்டிங் பட்டறையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தது தெரியவந்தது.

தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கொள்ளையன் மும்பைக்கு தப்பி சென்றது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படையினர் மும்பையில் முகாமிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். நிதி நிறுவன அதிபர் வீட்டில் கொள்ளையடித்ததும் நகை, பணத்ைத மூட்டை கட்டிக்கொண்டு சாவகாசமாக திருப்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயிலில் மும்பைக்கு தப்பி சென்றுள்ளனர். அவர்களை பிடிக்க தனிப்படையினர் தீவிரமாக களமிறங்கி உள்ளனர்.

Tags:    

Similar News