உள்ளூர் செய்திகள்
சினிமா பாடலுக்கு நடனமாடிய பெண் அதிகாரி: வீடியோ வைரல்
- அவரது நடனம் பார்வையாளா்களை வெகுவாக கவர்ந்தது.
- பார்வையாளர்கள் அடித்த விசில் சத்தம் காதை கிழித்தது.
பெரம்பலூர் :
தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் 'மக்கள் சேவையில் நூற்றாண்டு விழா' பெரம்பலூர் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் சார்பில் கொண்டாடப்பட்டது.
இதில் சிறப்பு விருந்தினராக அரியலூர் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கீதாராணி கலந்து கொண்டார். அப்போது அவர் அந்த விழாவில் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த ஹேய் மல்லிப்பூ வெச்சு வெச்சு வாடுதே... என்ற பாடலுக்கு உற்சாகமாக நடனம் ஆடினார்.
அவரது நடனம் பார்வையாளா்களை வெகுவாக கவர்ந்தது. அப்போது பார்வையாளர்கள் அடித்த விசில் சத்தம் காதை கிழித்தது. மேலும் டாக்டர் கீதாராணியின் அந்த நடன வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.