உள்ளூர் செய்திகள்
பிப்ரவரி 6 முதல் 9-ந்தேதி வரை காஞ்சிபுரத்தில் ராணுவ ஆட்சேர்ப்பு முகாம்
- தமிழ்நாட்டின் 12 மாவட்டங்கள், புதுச்சேரியை சேர்ந்த இளைஞர்கள் இந்த ஆட்சேர்ப்பு முகாமில் பங்கேற்கலாம்.
- தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திராவைச் சேர்ந்த உதவி செவிலியர்கள், சிப்பாய் பார்மா பிரிவுகளில் உள்ளவர்களும் கலந்து கொள்ளலாம்.
அக்னிவீர் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு முகாம் வரும் 6-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை காஞ்சிபுரத்தில் நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டின் 12 மாவட்டங்கள், புதுச்சேரியை சேர்ந்த இளைஞர்கள் இந்த ஆட்சேர்ப்பு முகாமில் பங்கேற்கலாம்.
தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திராவைச் சேர்ந்த உதவி செவிலியர்கள், சிப்பாய் பார்மா பிரிவுகளில் உள்ளவர்களும் இதில் கலந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.