உள்ளூர் செய்திகள்

ஊடுபயிர் செய்துள்ள பயிர்களை படத்தில் காணலாம்.


உடன்குடி-பரமன்குறிச்சி பகுதியில் ஊடுபயிர் செய்து அசத்தும் விவசாயிகள்

Published On 2023-02-28 08:37 GMT   |   Update On 2023-02-28 08:37 GMT
  • உடன்குடி, பரமன்குறிசி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் தற்போது பல்வேறு ஊடு பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு சாதனை படைக்கின்றனர்.
  • உடன்குடி பகுதியில் உள்ள அனைத்து குளங்களும், குட்டைகளும் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது.

உடன்குடி:

உடன்குடி, பரமன்குறிசி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் கோடை காலத்தையும் தாங்கும் தென்னை, பனை விவசாயம் மட்டுமே முன்பு எல்லாம் நடந்து வந்தது. தற்போது பல்வேறு ஊடு பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு சாதனை படைக்கின்றனர். வாழை விவசாயத்துடன் நிலக்கடலையையும், பனை மரத்துடன் தென்னை, முருங்கை என்று ஊடு பயிராக பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.

இதைப்போல சக்கரவள்ளி கிழங்கு. மரவள்ளி கிழங்கு, சப்போட்டா, மா, சவுக்கு என பல வகையில் பயிரிட்டு தற்போது விவசாய தொழிலில் முழு கவனம் செலுத்தி வருகின்றனர். அதனால் உடன்குடி மற்றும் சுற்றுபுற பகுதியில் பல கிராமங்களில் விவசாய பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த ஆண்டு பருவமழை முறையாக பெய்யவில்லை.மிக மிக குறைவாகவே பெய்தது, இதனால் உடன்குடி பகுதியில் உள்ள அனைத்து குளங்களும், குட்டைகளும் தண்ணீரில் இல்லாமல் வறண்டு கிடக்கிறது. இது பற்றி விவசாயி ஒருவர் கூறும்போது, இறைவன் மனது வைத்தால் ஒரு நாள் இரவு பகலாக மழை பெய்தால் எங்கள் பகுதியில் உள்ள அனைத்து குளங்களும், குட்டைகளும் நிரம்பிவிடும். எப்படியும் மழை வரும் குளங்கள்- குட்டைகள் எல்லாம் நிரம்பும். விவசாய நிலம் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கையில் ஊடுபயிர் விவசாயத்தை செய்துள்ளோம் என்றனர்.

Tags:    

Similar News