உள்ளூர் செய்திகள்

ரூ.5க்கு தக்காளி விற்று விவசாயிகள் போராட்டம்

Published On 2022-11-21 14:52 IST   |   Update On 2022-11-21 14:52:00 IST
  • விவசாயிகளிடம் இருந்து 6 ரூபாய்க்கு தக்காளியை வாங்குகிறார்கள்.
  • கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

கோவை,

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனு அளிக்க வந்தனர்.

தக்காளிக்கு உரிய விலை கிடைப்பதில்லை என்று கூறி ஒரு கிலோ தக்காளியை 5 ரூபாய்க்கு விற்பனை செய்து நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும் இதன் மூலம் சேகரமாகும் தொகையை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்புவதாகக் கூறினர்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் பழனிசாமி கூறியதாவது:-

கடந்த ஒரு மாதமாக தக்காளி பயிரிட்ட விவசாயிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தொடர் மழை மற்றும் பனியின் காரணமாக வெடிப்பு அழுகல் ஏற்பட்டுள்ளது.

இதனை பயன்படுத்தி விவசாயிகளிடம் இருந்து 6 ரூபாய்க்கு தக்காளியை வாங்குகிறார்கள்.

மக்களுக்கு 25 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். இதனை அரசு முறைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கோவை மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

Tags:    

Similar News