நிலத்தகராறு காரணமாக விவசாயிக்கு கத்தி குத்து
- கடந்த 16-ந் தேதி இருதருப்பினருக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
- சென்னப்பாநாயுடு, அஞ்சப்பா ஆகிய 3 பேரும் சேர்ந்து கிருஷ்ணப்பாவை கையால் தாக்கியும், கத்தியால் வெட்டியும் உள்ளனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த சின்னமத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணப்பா (வயது 45). அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் முனிகிருஷ்ணன் (45), சென்னப்பா நாயுடு (28), அஞ்சப்பா (50) ஆகிய 3 பேரும் கிருஷ்ணப்பாவின் உறவினர்கள். இந்த நிலையில் கிருஷ்ணப்பாவின் நிலம் அருகே முனிகிருஷ்ணனுக்கும் சொந்தமாக நிலம் இருப்பதால் இருவருக்கும் வழித்தடம் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் அவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி இருதருப்பினருக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த முனிகிருஷ்ணன், சென்னப்பாநாயுடு, அஞ்சப்பா ஆகிய 3 பேரும் சேர்ந்து கிருஷ்ணப்பாவை கையால் தாக்கியும், கத்தியால் வெட்டியும் உள்ளனர். இதில் படுகாயமடைந்த கிருஷ்ணப்பாவை உறவினர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து அவர் சூளகிரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் முனிகிருஷ்ணன் உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.