உள்ளூர் செய்திகள்
குடும்பத்தகராறில் விஷம் குடித்து பெண் தற்கொலை
- கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
- டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி பெண் உயிரிழந்தார்.
சங்கராபுரம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் மூங்கில்துறைப்பட்டு அருகே மேட்டுக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பூராகவன். இவரது மனைவி பிரேமா (45). கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த பிரேமா வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து மயங்கி விழுந்தார்.
இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் மூங்கில்துறைப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.