உள்ளூர் செய்திகள்

சிகிச்சை அளித்தவர் சாவு சிதம்பரத்தில் போலி டாக்டர் கைது

Published On 2023-08-09 07:26 GMT   |   Update On 2023-08-09 07:26 GMT
  • ரமணன் கொத்தட்டை பகுதியில் ஆண்டவர் என்ற பெயரில் மெடிக்கல் நடத்தி வருகிறார்.
  • ரமணன் மெடிக்கலுக்கு சென்று சோதனை செய்தார்.

கடலூர்: 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த புவனகிரி சின்னகுமட்டி பகுதியை சேர்ந்தவர் ரமணன் (வயது 39). இவர் கொத்தட்டை பகுதியில் ஆண்டவர் என்ற பெயரில் மெடிக்கல் நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 6-ந்தேதி அதே பகுதியை சேர்ந்த பழனிச்சாமி மகன் தனசேகர் (23) காய்ச்சலுக்காக ரமணன் மெடிக்கலுக்கு வந்து அவரிடம் மருந்து மற்றும் ஊசி போட்டுள்ளார். இதனையடுத்து தனசேகருக்கு மேலும் உடல் நலம் மோசமாகி கடலூர் மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து தனசேகரனின் தாய் தமிழ்ச்செல்வி என் மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக கொடுத்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை வட்டார அலுவலர் அமுதா சின்னகுமட்டி பகுதியில் உள்ள ரமணன் மெடிக்கலுக்கு சென்று சோதனை செய்தார். அப்போது அவர் மருத்துவர் சீட்டு இல்லாமல் நோயாளிகளுக்கு மருந்து வழங்கியது தெரியவந்தது.

உடனே இதுகுறித்து வட்டார அலுவலர் அமுதா பரங்கிப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் பரங்கிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில் ரமணன் மருத்துவ படிப்பு படிக்காமலும், மருத்துவர் சீட்டு இல்லாமலும் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு மருந்துவம் பார்த்தது தெரியவந்தது. உடனே போலீசார் ரமணன் மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர். மருத்துவம் படிக்காமல் மருந்து மற்றும் ஊசி போட்ட போலி டாக்டரால் சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News