உள்ளூர் செய்திகள்

விஷ வண்டுகள் அழிக்கப்பட்ட காட்சி. 

மங்கலம்பேட்டை அருகே மூதாட்டியை தாக்கிய விஷ வண்டுகள் அழிப்பு

Published On 2022-08-13 07:30 GMT   |   Update On 2022-08-13 07:30 GMT
  • விசித்திரமான வகையில் கூடு கட்டியிருந்த பெரிய அளவிலான விஷ வண்டுகள்.
  • காவேரி சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்றார்.

கடலூர்:

மங்கலம்பேட்டை அருகே உள்ள கர்நத்தம் கிராமம், தெற்கு தெருவைச் சேர்ந்தவர் கோபு (வயது.46). இப்பகுதியில் உள்ள இவரது கான்கிரீட் வீட்டின் அருகே உள்ள இவரது பழைய ஓட்டு வீட்டில், கோபுவின் பாட்டி மனைவி காவேரி (வயது.72) என்பவர் வசித்து வந்தார். இந்த நிலையில், பழைய ஓட்டு வீட்டில் உள்ள பனை மரச் சாரத்தில், 3 அடுக்குகள் அமைத்து விசித்திரமான வகையில் கூடு கட்டியிருந்த பெரிய அளவிலான விஷ வண்டுகள், அங்கு படுத்திருந்த காவேரியை கடித்தது. இதனையடுத்து, காவேரி சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்றார். இது குறித்த தகவலின்பேரில், மங்கலம்பேட்டை தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு நிலைய சிறப்பு அலுவலர் ஜெயச்சந்திரன் (போக்குவரத்து) தலைமையில், தீயணைப்பு வீரர்கள் பாண்டியன், முஹமது புன்யாமீன், அசோக், செல்வம் ஆகியோர் அங்கு விரைந்துச் சென்று, 3 அடுக்குகளில் விஷ வண்டுகள் கட்டியிருந்த கூட்டினை முற்றிலும் அகற்றி அப்புறபடுத்தினர்.

Tags:    

Similar News