உள்ளூர் செய்திகள்

கோத்தகிரிைய சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவர் தேர்வு

Published On 2023-01-24 15:25 IST   |   Update On 2023-01-24 15:25:00 IST
  • கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் அதிகம் இருந்தது.
  • சிறந்த பயிற்சி பெறுவதற்கும் உதவியாக இருக்கும் என தெரிவித்தார்.

அரவேணு

கோத்தகிரி அருகே உள்ள கட்டபெட்டு செல்வபுரத்தை சேர்ந்தவர் ஜெயலட்சுமி.

இவரது மகன் பிரவீன்(வயது17). இவர் கோத்தகிரியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.

சிறு வயதிலேயே தந்தையை இழந்த இவர் தனது தாயாரின் பராமரிப்பில் இருந்து வந்தார். இவரது தாயார் ஜெயலட்சுமி தேயிலை பறிக்கும் கூலித் தொழிலாளி ஆவார். பிரவீனுக்கு சிறு வயது முதலே கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் அதிகம் இருந்தது.

இதையறிந்த அந்த பகுதியை சேர்ந்த கிரிக்கெட் பயிற்சியாளர்கள் இமானுவேல், செந்தில்கு மார் ஆகியோர் அவருக்கு சிறப்பு பயிற்சி அளித்தனர்.

இதன் விளைவாக அவர் மாவட்ட, மாநில அணிகளுக்கு தேர்வு பெற்று போட்டிகளில் பங்கேற்று சிறப்பாக விளையாடி வந்தார். இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் சேலம் மாவட்டத்தில் நடந்த ஜூனியர் கிரிக்கெட் தகுதி சுற்று போட்டிகளில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த 4 பேர் தேர்வாகினர்.

இதில் கோத்தகிரியை சேர்ந்த பிரவீனும் பங்கேற்றார். போட்டியின் முடிவில் அவர் தேசிய அணிக்கு தேர்வு பெற்று சாதனை படைத்தார்.

இவர் வரும் மே மாதம் வங்கதேசம் மற்றும் இலங்கை நாடுகளில் நடைபெற உள்ள சர்வதேச ஜூனியர் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.தேசிய அணிக்கு தேர்வு பெற்றுள்ள பிரவீனை அப்பகுதி மக்களும், விளையாட்டு ஆர்வலர்களும் பாராட்டி வருகின்றனர். மாணவனின் தயார் கூறுகையில்,

பொருளாதார ரீதியாக பின்னடைவு இருப்பதால் அரசு மற்றும் பொது அமைப்புகள் ஏதாவது உதவி செய்தால் எனது மகன் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு சிறந்த பயிற்சி பெறுவதற்கும் உதவியாக இருக்கும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News