உள்ளூர் செய்திகள்

தலமலை வனப்பகுதி ரோட்டில் கரடி நடமாட்டம்

Published On 2022-06-14 07:54 GMT   |   Update On 2022-06-14 07:54 GMT
  • தலமலை வனச்சரகத்திக்கு உட்பட்ட தலமலை இருந்து திம்பம் செல்லும் வனப்பகுதி ரோட்டில் ஒரு கரடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி உலாவியது.
  • இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் வலியுறுத்தி உள்ளனர்.

தாளவாடி:

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்த்தில் 10 வன சரகங்கள் உள்ளன. அடர்ந்த வனப்பகுதியான இந்த வனப்பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்பட ஏராளமான வன விலங்குகள் வசித்து வரு கின்றன.

இந்த வனப்பகுதிகளில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள் அடிக்கடி வெளியேறி வருகிறது. அப்போது அந்த வழியாக வரும் லாரிகளை வழிமறித்து அதில் இருந்து கரும்புகளை தின்று வரு கிறது.

மேலும் இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து புலி, சிறுத்தைகளும் வெளியே வந்து செல்கிறது. இதே போல் கரடிகளும் வனப்பகுதியில் இருந்து வெளியேறி வருகிறது. அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் வனப்பகுதியில் இருந்து வரும் விலங்குகளை செல்போன்களில் படம் பிடித்தும் செல்கிறார்கள். அப்போது ஒரு சில நேரங்க ளில் வாகன ஓட்டிகளை துரத்துகிறது.

இந்நிலையில் தலமலை வனச்சரகத்திக்கு உட்பட்ட தலமலை இருந்து திம்பம் செல்லும் வனப்பகுதி ரோட்டில் ஒரு கரடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி உலாவியது. இதை கண்ட அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிறிது தூரத்துக்கு முன்பே வாகனங்களை நிறுத்தி கொண்டனர்.

இதனால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.தாளவாடி மற்றும் தலமலை வனப்பகுதியில் இருந்து வன விலங்குகள் அடிக்கடி வெளியேறி வருகிறது. எனவே இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் வலி யுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News