தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
- மகள் சம்பவத்தன்று வேலை விஷயமாக வெளியே சென்றவர் காதலருடன் சென்று விட்டார்.
- இதனால் வெங்கடேசன் மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளார்.
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் அடுத்த கே.என்.பாளையம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (54). இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு 25 வயதில் ஒரு மகள் உள்ளார்.
இவர்களது மகள் சம்பவத்தன்று வேலை விஷயமாக வெளியே சென்றவர் காதலருடன் சென்று விட்டார். இதனால் வெங்கடேசன் மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று பயிர்களுக்கு அடிப்பதற்காக தனது வீட்டில் வைத்திருந்த கலைக்கொல்லி (விஷம்) மருந்தை குடித்துள்ளார். அப்போது சித்ரா தோட்டத்திலிருந்து வீட்டுக்கு வந்துள்ளார்.
அப்போது தனது கணவர் வாந்தி எடுத்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து கணவரிடம் இதுகுறித்து கேட்டபோது தான் விஷம் குடித்து விட்டதாக கூறியதை கேட்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார்.
அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை கொண்டு வருகின்றனர்.