உள்ளூர் செய்திகள்

பட்டாசு வெடித்தவரை எச்சரித்து அனுப்பி வைத்த போலீசார்

Published On 2023-02-27 15:06 IST   |   Update On 2023-02-27 15:06:00 IST
  • பெண்கள் திடீரென சென்னிமலை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
  • பட்டாசு வெடித்தவர் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர்.

சென்னிமலை:

சென்னிமலை அடுத்த அம்மாபாளையம் பகுதியில் ஒருவர் அடிக்கடி இரவு நேரத்தில் சம்பந்தமில்லாமல் பட்டாசு வெடித்து வந்ததாக கூறப்படுகிறது.

பட்டாசு சத்தத்தால் கால்நடைகள் கயிற்றை அவிழ்த்து கொண்டு ஓடி விடுவதாக பொதுமக்கள் போலீசில் புகார் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை அந்த நபர் மீண்டும் அதிக சத்தத்துடன் கூடிய பட்டாசை வெடித்ததாக தெரிகிறது.

இதில் இருந்த தீ பரவி அங்குள்ள ஊஞ்சலாங்காட்டை சேர்ந்த தங்கராசு என்பவரின் தோட்டத்தில் உள்ள வேலியில் தீப்பிடித்து எரிந்தது.

இதைகண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்த உடனடியாக சென்னிமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

இந்த நிலையில் அடிக்கடி பொது மக்களுக்கு இடை யூறாக பட்டாசு வெடிக்கும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி நேற்று இரவு அம்மாபாளையத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் திடீரென சென்னிமலை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

அப்போது பொது மக்களுக்கு இடையூறாக பட்டாசு வெடித்தவர் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர்.

இதைத் தொடர்ந்து பொது மக்கள் 2 மணி நேரத்துக்கு பிறகு அங்கு இருந்து கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் போலீசார் பட்டாசு வெடித்தவரை பிடித்து விசாரணை நடத்தி னர்.

இதையடுத்து அவரை போலீசார் இது போன்று நடந்து கொள்ள கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News