உள்ளூர் செய்திகள்

ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த 63 நாயன்மார்கள்.

ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவிலில் 63 நாயன்மார்கள் விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2023-07-26 09:53 GMT   |   Update On 2023-07-26 09:53 GMT
  • அறுபத்து மூவர் விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
  • இரவு ஒரே சப்பரத்தில் 63 எழுந்தருளி திருவிதி உலாவும் நடக்க உள்ளது.

ஈரோடு:

ஈரோடு கோட்டை பகுதி யில் பிரசித்தி பெற்ற ஆருத்ர கபாலீஸ்வரர் (ஈஸ்வரன்) கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் அறம் வளர்த்த நாயன்மார்களை போற்றும் வகையில் அறுபத்து மூவர் விழா சிறப்பாக கொண்டாடப்படும்.

இதேபோல் நடப்பாண்டு அறுபத்து மூவர் விழா இன்று காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. சுந்தரமூர்த்தி, சேரமான் பெருமாள் நாயனார் குருபூஜையும், சிறப்பு வழிபாடும், ஏழாம் திருமுறை முற்றோதுதல் நடந்தது.

வரும் 28-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மகளிர் திருவிளக்கு வழிபாடும், 30-ந் தேதி தலவிருட்சம் வன்னியம்மன் மற்றும் வன்னிநாதருக்கு சிறப்பு அபிஷேகமும் நடக்கிறது.

விழாவின் முக்கிய நிகழ்வான 31-ந் தேதி காவிரி ஆற்றில் இருந்து 108 கலசத்தில் பக்தர்களால் கொண்டு வரப்பட்ட தீர்த்தம், பஞ்சாமிருதம், பால், இளநீர் உள்ளிட்ட 16 வகை திரவிய ங்களில் 63நாயன்மார்களுக்கும், உற்சவர்களுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட உள்ளது.

அன்றைய தினம் இரவு ஒரே சப்பரத்தில் 63 எழுந்தருளி திருவிதி உலாவும் நடக்க உள்ளது.

இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் கயல்விழி, சரக ஆய்வர் தினேஷ்குமார் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News