உள்ளூர் செய்திகள்
- கவுதம் திடீரென நீரில் மூழ்கினார்.
- நீண்ட போராட்டத்துக்கு பிறகு கவுதம் உடல் பிணமாக மீட்கப்பட்டது.
அம்மாபேட்டை:
ஈரோடு மாமரத்துபாளையம் பாலாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் கவுதம் (25). கூலி தொழிலாளி.
அம்மாபேட்டை அடுத்த பூனாச்சி ஏரியில் உறவினருடன் கவுதம் குளிக்க சென்றார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற கவுதம் திடீரென நீரில் மூழ்கினார்.
அந்த வழியாக வந்தவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இது குறித்து அம்மாபேட்டை போலீசருக்கும், அந்தியூர் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நீரில் மூழ்கிய கவுதமை தேடினார். நீண்ட போராட்டத்துக்கு பிறகு கவுதம் உடல் பிணமாக மீட்கப்பட்டது.
இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.