உள்ளூர் செய்திகள்

பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

Published On 2022-06-25 08:05 GMT   |   Update On 2022-06-25 08:05 GMT
  • பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2022-2023-ம் கல்வியாண்டிற்கு நேரடி 2-ம் ஆண்டு மற்றும் முதலாமாண்டு முழு நேரம் பட்டயப்படிப்பில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • இந்த தகவலை பெருந்துறை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

ஈரோடு:

பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2022-2023-ம் கல்வியாண்டிற்கு நேரடி 2-ம் ஆண்டு மற்றும் முதலாமாண்டு முழு நேரம் பட்டயப்படிப்பில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். www.tnpoly.in என்ற இணையதளம் மூலம் வரும் அடுத்த மாதம் 8-ந் தேதி வரை விண்ணப்பித்து பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

இந்த கல்லூரியில் அமைப்பியல், எந்திரவியல், மின்னியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் மற்றும் கணிணி பொறி யியல் என 5 முழுநேரப் பாடப்பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பாடப்பிரிவிலும் 60 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.

இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்யும் பொதுப்பிரிவினர் ரூ.150 பதிவுக்கட்டணமாக கிரிடிட் கார்டு, டேபிட் கார்டு,நெட் பேங்க் மூலம் செலுத்தலாம். பழங்குடி-பட்டியல் பிரிவினருக்கு விண்ணப்ப பதிவுக்கட்டணம் இல்லை.

முதலாம் ஆண்டில் சேர விரும்பும் மாணவர்கள் 10-ம் வகுப்பில் தேர்ச்சி அல்லது அதற்கு இணை யான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

நேரடி 2-ம் ஆண்டு சேர விரும்பும் மாணவர்கள் மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இயற்பி யல், வேதியியல், கணிதம், உயிரியல் அல்லது தொழில் பிரிவில் கணிதம், இயற்பியல், வேதியியல் அல்லது அதற்கு சமமான படிப்பு படித்து இருக்க வேண்டும்.

இந்த தகவலை பெருந்துறை அரசினர் பாலி டெக்னிக் கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News