உள்ளூர் செய்திகள்

கடுக்கம்பாளையம் பஞ்சாயத்து அலுவலகத்தில் 13-ந் தேதி ஆதார் சிறப்பு முகாம்

Published On 2022-10-11 08:12 GMT   |   Update On 2022-10-11 08:12 GMT
  • உலகம் முழுவதும் அக்டோபர் மாதம் தேசிய அஞ்சல் வாரம் கொண்டாட ப்படுகிறது.
  • கடுக்கம்பாளையம் பஞ்சாயத்தில் அலுவலகத்தில் ஆதார் சிறப்பு முகாம் வரும் 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை நடக்கிறது.

ஈரோடு:

உலகம் முழுவதும் அக்டோபர் மாதம் தேசிய அஞ்சல் வாரம் கொண்டாட ப்படுகிறது. அதற்காக, ஒவ்வொரு தினமும், குறிப்பிட்ட சேவையை ஒதுக்கி கொண்டாடுகின்றனர்.

இது குறித்து ஈரோடு முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

முதல் நாளான கடந்த 9 -ந் தேதி உலக அஞ்சல் தினம் கடைபிடிக்கப்பட்டது. நேற்று வலுவூட்டல் தினமும், இன்று தபால் தலை தினமும், நாளை தபால் தினமும், 13-ந் தேதி சாமானியர் நல்வாழ்வு தினமும் கடைபிடி க்கப்படுகிறது.

நேற்று அனைத்து அஞ்சலகங்களிலும் சிறப்பு முகாம் நடந்தது. மொட க்குறிச்சி அலுவலகத்தில் அஞ்சல் கண்காணிப்பாளர் கருணாகரபாபு தலைமையில் பேரணி நடந்தது.

இன்று தபால் தலை சேகரிப்பு கண்காட்சி, ஈரோடு கோட்ட அலுவலகத்தில் நடக்கிறது. பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். பள்ளி மாணவ, மாணவிகளிடம் தபால் தலை சேகரிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக வினாடி, வினா நிகழ்ச்சி நடைபெறும்.

இதில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ் வழங்கப்படும். விருப்பம் உள்ள மாணவ, மாணவிகள் தபால் தலை சேகரிப்பு கணக்குகளை தொடங்கலாம்.

இவ்வாரத்தில், மூத்த குடிமக்கள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் தபால் நிலையங்கள், தபால்காரர்களிடம் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் கணக்குகளை தொடங்கலாம்.

கடுக்கம்பாளையம் பஞ்சாயத்தில் அலுவலகத்தில் ஆதார் சிறப்பு முகாம் வரும் 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை நடக்கிறது. பெரு ந்துறை கருக்கம்பாளையம் சமுதாய கூடத்தில் நாளை முதல் வரும் 13-ந் தேதி வரை ஆதார் சிறப்பு முகாம் நடக்க உள்ளது.

தாமரைபாளையம் அரசு மேல்நிலை பள்ளியில் வரும் 13-ந் தேதி முதல் 15 -ந் தேதி வரை ஆதார் சிறப்பு முகாம் நடக்கிறது. கோபிசெட்டிபாளையம் களிங்கியத்தில் அஞ்சல் அலுவலர்கள் குடியிருப்பு பகுதியில் வரும் நாளை முதல் வரும் 14-ந் தேதி வரை ஆதார் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்ப ட்டுள்ளது.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News