உள்ளூர் செய்திகள்

பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

Published On 2022-10-01 15:11 IST   |   Update On 2022-10-01 15:11:00 IST
  • சத்தியமங்கலம் ரங்கசமுத்திரத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.
  • இந்த கூட்டத்தில் பள்ளியின் வளர்ச்சிக்காக பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

சத்தியமங்கலம்:

சத்தியமங்கலம் ரங்கசமுத்திரத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியை செல்வி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் லோகநாதன் முன்னிலை வைத்தார்.

இந்த கூட்டத்தில் மாணவர்கள் சேர்க்கை மற்றும் இடை நின்றல் கண்காணிப்பு குழு தலை வராக சவுடம்மாள், கற்றல் மேம்பாட்டு குழு தலைவராக சந்தியா, பள்ளி மேலாண்மை குழு தலைவராக சம்ஷாத் பானு, பள்ளி கட்டமைப்பு குழு தலைவராக நாகராஜன் ஆகியோர் தேர்வு செய்ய ப்பட்டனர்.

ஒவ்வொரு குழுவிலும் 5 பேர் கொண்ட குழுவாக பிரிக்கப்பட்டு உள்ளது.

இந்த கூட்டத்தில் பள்ளியின் வளர்ச்சிக்காக பள்ளியில் உள்ள கட்டிடம் மற்றும் ஜன்னல் கதவுகள் பழுது பார்த்தல், சத்துணவு மையங்களுக்கு வர்ணம் பூசுதல், மின் இணைப்பு வழங்குதல், சத்துணவு கூட்டத்துக்கு என்று தனியாக தண்ணீர் குழாய் அமைத்தல் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானம் நகல் சத்தியமங்கலம் நகராட்சி ஆணையரிடம் கொடுக்கப்பட்டது.

Tags:    

Similar News