எழுமாத்தூர், கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் ரூ.95 லட்சத்துக்கு விளைபொருட்கள் விற்பனை
- எழுமாத்தூர், கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் ரூ.95 லட்சத்துக்கு விளைபொருட்கள் விற்பனை நடைபெற்றது
- நிலக்கடலைக்காய் கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ.65.45-க்கு விற்பனையானது
கொடுமுடி,
எழுமாத்தூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்பருப்பு விற்பனை க்கான ஏலம் நடந்தது. இதில் ஆயிரத்து 484 மூட்டைகள் கொண்ட 71 ஆயிரத்து 669 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு விற்பனையானது. விற்பனையான பருப்பில் முதல்தர பருப்பு கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ79.90-க்கும், அதிகபட்ச விலையாக ரூ81.81-க்கும், சராசரி விலையாக ரூ.81.70 என்ற விலைகளிலும், 2-ம் தர பரு ப்பு குறைந்தபட்ச விலையாக ரூ63.35-க்கும், அதிகபட்ச விலையாக ரூ75.39-க்கும், சராசரி விலையாக ரூ72.60 என்ற விலைகளில் மொத்தம் ரூ.55 இலட்சத்து 47 ஆயிரத்து 858-க்கு விற்பனையானது.
இதேபோல கொடுமுடி ஒழுங்குமுறை விற்ப னைக்கூடத்தில் தேங்காய் மற்றும் தேங்காய் பருப்பு, நிலக்கடைலக்காய் விற்ப னைக்கான ஏலம் நடந்தது. இதில் 13 ஆயிரத்து 695 எண்ணிக்கையிலான 4 ஆயிரத்து 671 கிலோ எடை யுள்ள தேங்காய்கள் கி லோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ.17.90- க்கும், அதிகபட்ச விலையாக ரூ.23.60-க்கும், சராசரி விலையாக ரூ.22.89 என்ற விலைகளில் மொத்தம் ரூ.97 ஆயிரத்து 413-க்கு விற்பனையானது.
இதனை அடுத்து தேங்காய் பருப்புக்கான ஏலத்தில் 891 மூட்டைகள் கொண்ட 43 ஆயிரத்து 737 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு விற்பனையானது. விற்பனையான பருப்பில் முதல் தர பருப்பு கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ.78.99-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.80.39-க்கும், சராசரி விலையாக ரூ.79.99 என்ற விலைகளிலும், 2-ம் தர பருப்பு குறைந்தபட்ச விலையாக ரூ.63.80-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.78.99-க்கும், சராசரி விலையாக ரூ.76.78 என்ற விலைகளில் மொத்தம் ரூ.33 இலட்சத்து 12 ஆயிரத்து 943-க்கு விற்பனையானது.
இவற்றை அடுத்து நிலக்க டலைக்காய் விற்பனை க்கான ஏலம் நடந்தது. இதில் 7 ஆயிரத்து 972 கிலோ எடையுள்ள 278 மூட்டைகள் கொண்ட நிலக்கடலைக்காய் கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ.65.45-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.83.30-க்கும், சராசரி விலையாக ரூ.80.50 என்ற விலைகளி்ல் மொத்தம் ரூ.5 இலட்சத்து 56 ஆயிரத்து 737-க்கு விற்பனையானது. ஆகமொத்தம் எழுமா த்தூர், கொடுமுடி ஒழுங்கு முறை விற்பனைக்கூட ங்களில் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலை க்காய் சேர்த்து ரூ.95 இலட்சத்து 14 ஆயிரத்து 951-க்கு விற்பனையானது.