உள்ளூர் செய்திகள்

பவானி அருகே காலிகுடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

Published On 2023-08-07 14:05 IST   |   Update On 2023-08-07 14:05:00 IST
  • பவானி அருகே காலிகுடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
  • குடிநீர் வழங்க கோரி நடந்தது

பவானி,

ஈரோடு மாவட்டம் பவானி அருகே வரத நல்லூர் அடுத்த கூலிக்காரன் பாளையம், பொரட்டு க்காட்டூர் கிராமம் உள்ளது. இப்பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் வசித்து வருகிறார்கள்.இப்பகுதி மக்களுக்கு காவிரி ஆற்றில் இருந்து வரதநல்லூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக அப்பகுதி பொதுமக்களுக்கு காவிரி ஆற்றின் தண்ணீர் கிடைக்க வில்லை என கூறப்படு கிறது.

இதனைத் தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) காலை அப்பகுதியை சேர்ந்த கிராம பொதுமக்கள் பவானி- மேட்டூர் மெயின் ரோட்டில் கூலிக்காரன் பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் ஒன்று திரண்டனர். இதை தொடர்ந்து அவர்கள் காலி குடங்களுடன் குடிநீர் கேட்டு திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து தகவல் அறிந்த பவானி போலீசார் மற்றும் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கிராம ஊராட்சி மாரிமுத்து மற்றும் வரதநல்லூர் பஞ்சாயத்து தலைவர் உட்பட பலர் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அதிகாரிகள் உரிய நட வடி க்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News