உள்ளூர் செய்திகள்

பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் போலீசார் பாதுகாப்பு

Published On 2022-12-06 14:46 IST   |   Update On 2022-12-06 14:46:00 IST
  • கார்த்திகை மாதத்தை முன்னிட்டு அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களால் கோவில் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது.
  • பவானி போலீசார் சங்கமேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் முன் பகுதி, பரிகார மண்டப பகுதி என பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

பவானி:

பவானி சங்கமேஸ்வரர் கோவில் மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த கோவிலாக விளங்கி வருகிறது.

கோவில் பின்பகுதியில் உள்ள கூடுதுறையில் உள்ளூர், வெளியூர், வெளி மாநில பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம்.

கார்த்திகை மாதத்தை முன்னிட்டு கேரளாவில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் பலர் கோவிலுக்கு வருகை தரும் காரணத்தால் கோவில் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது.

இந்நிலையில் பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று பவானி போலீசார் சங்கமேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் முன் பகுதி, கோவில் வளாகம், பரிகார மண்டப பகுதி என பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அதேபோல் பக்தர்கள் கொண்டு வரும் ஜேன் பேக்குகள், உடமைகளை தீவிர பரிசோதனை செய்து கோவிலுக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News