உள்ளூர் செய்திகள்
லாட்டரி சீட்டு விற்ற மூதாட்டி கைது
- லாட்டரி சீட்டு விற்ற மூதாட்டி கைது செய்யபட்டனர்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சுற்று வட்டார பகுதிகளில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக பெருந்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற சப்-இன்ஸ்பெக்டர் தங்கதுரை மற்றும் போலீசார் அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த பெருந்துறை அண்ணாநகரைச் சேர்ந்த முருகேஷ் மனைவி சரஸ்வதி (வயது 63) என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் வைத்திருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் அவர் மீது பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.