உள்ளூர் செய்திகள்

தேசிய சித்த மருத்துவர் தினம் அனுசரிப்பு

Published On 2023-01-11 15:32 IST   |   Update On 2023-01-11 15:32:00 IST
  • பவானி அரசு மருத்துவமனையில் தேசிய சித்த மருத்துவ தினம் கொண்டாடப்பட்டது.
  • விழாவில் பொதுமக்களுக்கும், நோயாள பயனாளிகளுக்கும் பாரம்பரிய உணவுகள் வழங்கப்பட்டது.

பவானி:

பவானி அரசு மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவின் மூலம் 6-வது தேசிய சித்த மருத்துவ தினம் கொண்டாடப்பட்டது.

தேசிய சித்த மருத்துவ தினத்தின் இந்த ஆண்டு கருத்துரு, ஆரோக்கிய வாழ்விற்கு சித்த மருத்துவ உணவு மற்றும் ஊட்டச்சத்து முறைகள் என்ற அடிப்படையில் பாரம்பரிய சிறு தானியங்கள் மூலம் செய்யப்பட்ட நிலக்கடலை உருண்டை, எள் உருண்டை, பாசிப்பயறு உருண்டை, சிறு தானிய பிஸ்கெட்டுகள், சாமை அவுல், தினை அவுல், வரகு அவுல், கம்பு வெல்ல உருண்டை, நெல்லித்தேனூறல், இஞ்சித்தேனூறல், மூலிகை பாணம் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டு அதன் பயன்கள் பற்றி சித்த மருத்துவர் கண்ணுச்சாமி எடுத்துரைத்தார்.

அதேபோல் மூலிகைக் கண்காட்சி, உணவே மருந்தாகும் கடைச்சரக்குகள் கண்காட்சி, புத்தக கண்காட்சி, நஞ்சில்லா உணவுகள் கண்காட்சி ஆகியன மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு அதன் பயன்கள் கூறப்பட்டது.

விழாவின் முடிவில் பொதுமக்களுக்கும், நோயாள பயனாளி களுக்கும் பாரம்பரிய உணவுகள் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News