டி.என்.பாளையம் அருகே மகனின் காலை கத்தியால் வெட்டிய தாய் கைது
- டி.என்.பாளையம் அருகே மகனின் காலை கத்தியால் வெட்டிய தாய் கைது செய்யப்பட்டார்
- பலத்த காயம் ஏற்பட்ட அய்யப்பன் கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து ள்ளார்
டி.என்.பாளையம்,
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே யுள்ள கொங்கர்பாளையம் ஊராட்சி கோவிலூர் ரேசன் கடை வீதியை சே ர்ந்தவர் அய்யப்பன் (வயது 37). இவர் ஆம்னி வேனை வாடகைக்கு எடுத்து ஓட்டி வருகிறார். அய்யப்பன் மனைவி மற்றும் இரு மக ன்களை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். அய்ய ப்பனின் தாயார் மாரிய ம்மாள் (61) கொங்கர்பா ளையம் பகுதியில் தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் சம்ப வத்தன்று மாரியம்மாளை வீட்டுக்கு வந்து விடுமாறு அய்யப்பன் அழைத்து ள்ளார். ஆனால் மாரியம்மா ள் மகன் அய்யப்பன் உடன் செல்ல மறுத்துள்ளார். இதி ல் வாக்குவாதம் முற்றவே ஒரு கட்டத்தில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மாரி யம்மாள் தனது கையில் வைத்திருந்த கரும்பு வெ ட்டப் பயன்படுத்தும் கத்தி யால் மகன் அய்யப்பனின் வலது காலில் வெட்டி யுள்ளார். இதில் பலத்த காயம் ஏற்பட்ட அய்யப்பன் கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து ள்ளார். இதையடுத்து அய்ய ப்பன் தனது தாயார் மீது பங்களாப்புதூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாரிய ம்மாளை கைது செய்தனர்.