உள்ளூர் செய்திகள்

நீர்வளத்துறை முதன்மை செயலாளர் ஜவகர் அம்மாபேட்டை பகுதியில் மேட்டூர் வலது கரை வாய்க்கால் புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்த போது எடுத்த படம்.

நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு

Published On 2023-03-24 08:03 GMT   |   Update On 2023-03-24 08:03 GMT
  • வாய்க்கால் புனரமைப்பு பணிகளை நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு மேற்கொண்டார்.
  • விவசாயிகளிடம் குறைகளை கேட்டு அறிந்தார்.

அம்மாபேட்டை:

உலக வங்கி உதவியுடன் நீர்வள, நிலவள திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் அம்மாபேட்டை அருகே கருங்காடு மேட்டூர் வலது கரை வாய்க்கால் புனரமைப்பு பணி, அந்தியூர், ஆப்பக்கூடல் ஏரி புணரமைப்பு பணிகளை தமிழக நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் தென்காசி எஸ்.ஜவகர் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளிடம் குறைகளை கேட்டு அறிந்தார்.

அப்போது வலது கரை வாய்க்கால் பாசன விவசாயி கள் கால்வாய் புனரமைப்பு பணிகள் நல்ல முறையில் விவசாயிகளுக்கு பயன் அளிப்பதாகவும்,

வாய்க்கா லின் இருபுறமும் கான்கிரீட் தளம் அமைத்த தால் கால்வாயி லிருந்து நீர் கசிவால் வேளாண் பயிர்கள் சேதம் ஆவது தடுக்கப்பட்டி ருப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

தொடர்ந்து விவசாயிகளிடம் கலந்துரையாடியவர் விவசாயிகளிடம் என்னென்ன பயிர்கள் எந்தெந்த சமயங்களில் பயிர் செய்துவருகிறீர்கள் என்றும், எந்த காலகட்டத்தில் மேட்டூர் வலது கரை வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது,

எத்தனை மாதங்கள் வரை தண்ணீர் செல்கிறது? திறக்கப்படக்கூடிய தண்ணீர் தங்கு தடை இன்றி அறுவடை சமயம் வரை விவசாயத்திற்கு கிடைக்கி றதா? என கேட்டறிந்தார்.

இதில் நீர் மேலாண்மை நிபுணர் கிருஷ்ணன், நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் அன்பழகன், பவானிசாகர் அணைக்கோட்ட செயற்பொறியாளர் அருளழகன், செயற்பொறியாளர் சிவக்கு மார், உதவி செயற்பொ றியாளர் சாமிநாதன், பவானி உபகோட்ட உதவி செயற்பொறியாளர் இளங்கோ, உதவி பொறியா ளர்கள் கவுதமன், தமிழ்பா ரத், சுலைமான் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News