உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 4 பேர் கும்பல் கைது

Published On 2022-08-24 10:04 GMT   |   Update On 2022-08-24 10:04 GMT
  • வாகன சோதனையில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் 1.5 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.
  • இதையடுத்து 2 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

அந்தியூர்:

ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசார் பஸ் நிலையம் எதிரில் உள்ள அண்ணாமலை லே-அவுட் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்து கொண்டிருந்தனர்.

அவர்களை நிறுத்தி மேற்கொண்ட சோதனையில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் 1.5 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.

விசாரணையில், அவர்கள் கருங்கல்பாளையம் கமலா நகரைச் சேர்ந்த சக்திகுமார் (30), கேரள மாநிலம், சுல்தான் பத்தேரியைச் சேர்ந்த சதீஷ் (34) என்பது தெரியவந்தது.

இதையடுத்து 2 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 1.5 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதேபோல, பர்கூரை அடுத்துள்ள கர்கேகண்டி சோதனைச் சாவடியில் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் போலீசாரைக் கண்டதும் தப்பியோட முயன்றனர். அவர்களை மடக்கிப் பிடித்து சோதனையிட்டதில் 850 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

விசாரணையில் அவர்கள் பர்கூரைச் சேர்ந்த மாதேவன் (52), சின்னப்பி (32) என்பதும், கர் நாடக மா நிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, பர்கூர் போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து கடத்தி வரப்பட்ட 2¼ கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News