உள்ளூர் செய்திகள்

பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கும் திட்டம் தொடக்கம்

Published On 2023-03-17 10:02 GMT   |   Update On 2023-03-17 10:02 GMT
  • பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது.
  • கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

பவானி:

பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது.

பவானி, காவேரி மற்றும் அமுதநதி என 3 நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமம் தென்னகத்தின் காசி, பரிகார ஸ்தலம், கூடுதுறை என பலர் பெயர் பெற்று விளங்கி வருகிறது.

ஆண்டு தோறும் பல்வேறு விழாக்கள் நடைபெற்று வரும் இந்த கோவிலில் தினசரி உள்ளூர், வெளியூர் பக்தர்கள் வருகை தந்து தங்கள் குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம், எள்ளும் தண்ணியும் விடுதல், பிண்டம் விடுதல் போன்ற பல்வேறு பரிகார பூஜைகள் செய்து காவேரி ஆற்றில் புனித நீராடி சங்கமேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்து வழிபாடு மேற்கொண்டு செல்வது வழக்கம்.

தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதை தொடர்ந்து கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் நலன் கருதி வெப்பத்தை தணிக்கும் வகையில் காலை 10.30 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நீர் மோர் வழங்கும் திட்டத்தை சங்கமேஸ்வரர் கோவில் ஆணையாளர் சுவாமிநாதன் தொடங்கி வைத்தார்.

இதில் சங்கமேஸ்வரர் கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News