உள்ளூர் செய்திகள்
சாப்ட்வேர் பெண் என்ஜினீயர் சாவு
- பிரிதா கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க ப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
- செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
கோபி:
கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள மொடச்சூர் பகுதியை சேர்ந்தவர் ஜெய ராஜ். இவரது மகள் பிரிதா (வயது 22). இவர் பெங்களூருவில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இதை யடுத்து கடந்த 28-ந் தேதி ஜெயராஜ் பெங்களூருவில் இருந்து அவரது மகள் பிரிதாவை கோபிசெட்டிபாளையம் அழைத்து வந்தார்.
தொடர்ந்து பிரிதா கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க ப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
மேல் சிகிச்சைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரிதாவை கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கோபிசெட்டி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.