உள்ளூர் செய்திகள்

நீர்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்

Published On 2023-08-11 15:22 IST   |   Update On 2023-08-11 15:22:00 IST
  • விவசாயிகள் வந்து அலுவலகத்தை முற்று கையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  • நிர்வாகிகள் நீர்வளத்துறை அலுவலகத்திற்கு சென்று தங்களது கோரிக்கைகளை மனுவாக வழங்கினர்.

ஈரோடு:

ஈரோடு வெண்டிபா ளையத்தில் உள்ள நீர்வ ளத்துறை செயற்பொ றியாளர் அலுவ லகத்திற்கு இன்று காலை கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க த்தை சேர்ந்த ஒருங்கிணை ப்பாளர் ரவி தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் வந்து அலுவலகத்தை முற்று கையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கீழ்பவானி கால்வாயில் ஆகஸ்ட் 15-ம் தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கவும், அதற்கான அரசாணையை உட னடியாக வெளியிடவும் வலியுறுத்தி கோஷமிட்டனர்.

கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் சீரமைப்பு திட்டத்தை கைவிடவும், அதற்கான அரசாணை எண் 276-ஐ ரத்து செய்ய வும் கோரிக்கை விடுத்தனர். மேலும் தற்போது நடை பெற்று வரும் கால்வாய் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்கவும்,

விவசாயிகளிடம் கருத்து கேட்காமல் தயாரிக்கப்பட்ட மோகன கிருஷ்ணன் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும். காலிங்கராயன், தடபள்ளி-அரக்கன் கோட்டை, கீழ்பவானி கால்வாய்களில் ஒரே சமயத்தில் தண்ணீர் திறக்க வேண்டும். பவானி ஆற்றில் கூடுதலாக தண்ணீர் திறப்ப தை நிறுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

ஆகஸ்ட் 15ஆம் தேதி பாசனத்துற்காக தண்ணீர் திறக்கப்படவில்லை என்றால், சுதந்திர தினத்தை கருப்பு தினமாக அனுசரித்து கீழ்பவானி பாசன பகுதி களான ஈரோடு, திருப்பூர், கரூர் மாவ ட்டங்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கால்நடைகள் மற்றும் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து முக்கிய நிர்வாகிகள் நீர்வளத்துறை அலுவலகத்திற்கு சென்று தங்களது கோரிக்கைகளை மனுவாக வழங்கினர். இந்த ஆர்ப்பா ட்டத்தில் ஆற்றல் அசோ க்குமார் உள்பட பல்வேறு விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News