உள்ளூர் செய்திகள்

விவசாயிகள் கால்வாய்க்குள் இறங்கி போராட்டம்

Published On 2023-07-30 14:39 IST   |   Update On 2023-07-30 14:39:00 IST
  • கால்வாய்க்குள் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  • கிராம மக்கள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

ஈரோடு:

கீழ்பவானி வாய்க்காலில் காங்கிரீட் அமைக்க பாசனதாரர்கள், குடிநீர் ஆதாரம் பெறும் கிராம மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நீர்வளத் துறை சார்பில் வாய்க்காலில் பல்வேறு பணிகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகின்றன.

அரசு உத்தரவுக்கு மாறாக மண் கரைகளை சேதப்படு த்தியும், மரங்களை வெட்டியும் அரசு அதிகாரிகளும், ஒப்பந்தாரர்களும் செயல்பட்டு வருவதை கண்டித்து ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட ங்களை சேர்ந்த கீழ்பவானி பாசன பாதுக்காப்பு இயக்கத்தினர் கடந்த 21-ந் தேதி முதல் கீழ்பவானி வாய்க்கால் வழித்தடத்தில், வாய்க்காலில் இறங்கி தொடர் ஆர்ப்பா ட்டம் நடத்தி வருகின்றனர்.

அதன்படி இன்று காலை ஈரோடு மாவட்டம், புங்கம்பாடி, ஊஞ்சலூர் பிரிவு கால்வாய் அருகே கீழ்பவானி வாய்க்காலின் 63-வது மைலில் கால்வாய்க்குள் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது வரும் ஆகஸ்ட் 15-ந் தேதி கீழ்பவானி வாய்க்காலில் பாசன நீர் திறந்துவிட வேண்டும். நல்ல நிலையில் இருந்த மண் கரைகளை சேதப்படுத்தி, அந்த இடங்களில் கட்டுமான பணிகளை வேண்டு மென்றே தாமதப்படுத்தும் ஒப்பந்ததாரர்கள் மற்றும் நீர்வளத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கான்கிரீட் திட்டம் கோரும் அரசாணை எண். 276-ஐ அரசு உறுதியாக ரத்து செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ரவி மற்றும் கசிவு நீர் பாசனதாரர்கள், குடிநீர் ஆதாரம் பெறும், சுற்று வட்டாரப் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News