உள்ளூர் செய்திகள்

மாரடைப்பால் விவசாய தொழிலாளி சாவு

Published On 2023-06-21 14:51 IST   |   Update On 2023-06-21 14:51:00 IST
  • சின்னசாமி தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார்.
  • அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக கூறினர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே உள்ள பனகஹள்ளி, ஈ..எம்.பி. தோட்டத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (58). விவசாயி. இவரது தோட்டத்தில் கடந்த 13 மாதங்களாக சின்னசாமி (60). என்பவர் வேலை பார்த்து வந்தார்.

பழனிச்சாமி ஒரு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க கோவை மாவட்டம், அன்னூர் சென்றுவிட்டார்.

இந்த நிலையில், பழனிச்சாமிக்கு போன் செய்த சின்னசாமி தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். பழனிச்சாமி, உடனடியாக தனது தம்பி துரைசாமிக்கு போன் மூலமாக தகவல் தெரிவித்துள்ளார்.

உடனடியாக ஆம்புலன்சுடன் சென்ற துரைசாமி, சின்னசாமியை மீட்டு, தாளவாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சின்னச்சாமி இறந்துவிட்டதாக கூறினர்.

இறந்த சின்னசாமியின் குடும்பத்தினர் குறித்து தகவல் எதுவும் தெரியாததால், சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சின்னசாமியின் உடல் வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News